அருள்நிதியின் ’டிமாண்டி காலனி 2’ ரிலீஸ்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (21:05 IST)
அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2 என்ற திரைப்பட த்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்துள்ளது.

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி என்ற திரைப்படம் நடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அனேகமாக ஆகஸ்ட் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் இந்த படத்தை வெளியிடுவதால் இந்த படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்றும் மக்களை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகம் வெற்றி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்