அருள்நிதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ்!

vinoth

சனி, 29 ஜூன் 2024 (11:52 IST)
தமிழ் சினிமாவில் வம்சம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் அருள்நிதி. அதன் பின்னர் மௌனகுரு, டிமாண்டி காலணி,  ஆறாதுசினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் டைரி என குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள அவர் தொடர்ச்சியாக த்ரில்லர் படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சுதன் தயாரிக்கிறார். இப்போது இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்