கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:20 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரபாஸ் படங்கள் தோல்வி அடைந்தாலும் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதிலிருந்து ரெட் ஜெயண்ட் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் கல்கி படத்தைத் தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட முன்பணம் கேட்டதுதானாம்.

வழக்கமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் கட்டணமில்லாத விநியோக முறையில்தான் படத்தை வெளியிட்டு, தங்கள் பங்கை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு பணத்தைக் கொடுக்கும். ஆனால் இந்த முடிவுக்கு கல்கி பட நிறுவனம் ஒத்து வராததால் இப்போது படம் வேறு நிறுவனத்துக்குக் கைமாறலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்