மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்! - வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்!

Prasanth Karthick
திங்கள், 14 அக்டோபர் 2024 (13:10 IST)

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து TTF வாசனை நீக்குவதாக அறிவித்த நிலையில் தற்போது புதிய ஹீரோவாக கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

பிரபல யூட்யூபரும், பைக் ரைடருமான டிடிஎஃப் வாசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்கும் நிலையில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலானது.

 

ஆனால் அதன் பின்னர் டிடிஎஃப் வாசன் அடுத்தடுத்து பல வழக்குகளில் சிக்கி வந்ததால் படத்தின் பணிகள் சரியாக தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய இயக்குனர் செல்அம், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து டிடிஎஃப் வாசனும் தன்னை செல்அம் ஏமாற்றி விட்டதாக வீடியோவை வெளியிட்டார்.

 

 

இதனால் மஞ்சள் வீரனில் ஹீரோவாக யார் நடிக்க போகிறார்? என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், அந்த படத்தில் வேறு ஒரு கதாப்பாத்திரத்தை நடிக்க இருந்த கூல் சுரேஷே தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மஞ்சள் வீரன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அதில் பேசும் கூல் சுரேஷ் “நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதேதான். ஆனால் அதை இப்போ சொல்ல முடியாது. Wait and see” என கூறுகிறார். இதன்மூலம் மஞ்சள் வீரனில் கூல் சுரேஷ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்