இந்தியில் மட்டும் 3500 திரையரங்குகளில் கங்குவா வெளியாகும்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தகவல்!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (10:34 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ரிலீஸாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் படம்பற்றிப் பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “படத்தை 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி வருகிறோம். அதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது. படத்தை இந்தியில் மட்டும் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்