நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

Siva

புதன், 22 மே 2024 (07:10 IST)
நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது உறுதி என்றும் அந்த கட்சி விஜய் விருப்பப்பட்டால் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து பயணம் செய்யும் என்றும் நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது என்பதும் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில் விஷால் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காமெடி நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கூல் சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அந்த கட்சிக்கு சிஎஸ்கே என்று பெயர் வைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

சிஎஸ்கே என்ற கட்சியை நான் தொடங்குவது உறுதி என்றும் நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்தால் தமிழக வெற்றி கழகத்துடன் சிஎஸ்கே என்ற கட்சி பயணம் செய்யும் என்றும் இது தமிழக வெற்றி கழகத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் கூல் சுரேஷ் காமெடியாக சொல்கிறாரா? அல்லது சீரியஸாக சொல்கிறாரா என்று தெரியவில்லை என இந்த செய்தியை படித்தவர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்