ஏன் மாப்பிள்ள பார்க்க போறீங்களா? அட்ரஸ் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகருக்கு சரியான பதில் கொடுத்த நெட்டிசன்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (14:13 IST)
சுற்றுச்சூழல் தாக்க வரைவு 2020 பற்றி வீடியோ வெளியிட்ட பெண்ணை மிரட்டும் விதமாக அவரது முகவரியைக் கேட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு சரியான பதில் கொடுத்துள்ளார் அந்த பெண்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவில் உள்ள எதிர்மறை அம்சங்கள் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஆளும் பாஜக அரசை சேர்ந்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த அவர்களை குற்றம் சாட்டுவதாகவும் மிரட்டுவதாகவும் நடந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்த வரைவு குறித்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டு அதன் குறைகளை எடுத்துக் கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலாகவே பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரை மிரட்டும் விதமாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண் தனது சமூகவலைதள பக்கத்தில் ‘இந்த பெண்ணின் பெயர் மற்றும் முகவரி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்’ என மிரட்டும் விதமாக கேட்டு இருந்தார்.

அது சமூகவலைதளங்களில் கண்டனங்களை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கல்யாணைப் பலரும் கேலி செய்யவும் ஆரம்பித்தனர். அதில் ஒரு நெட்டிசன் ‘ஏன் மாப்பிள்ளை பாத்து அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா புரோக்கர். கல்யாணத்துக்கு அணுகவும் கல்யாண் இவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ எனக் கூறியிருந்தார். அந்த கமெண்ட் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்