கார்த்திக் நரேன் & தனுஷ் படத்தில் நாயகி ஆகிறாரா மாளவிகா மோகனன்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (12:16 IST)
தனுஷின் அடுத்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா ‘உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் ( நம் இருவரையும் விரைவில் யாராவது ஒரே படத்தில் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்)’ எனக் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தனுஷ் ‘நானும் ஆவலாக இருக்கிறேன்’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது கார்த்திக் நரேன் தனுஷ் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடும் படலத்தில் இருக்க, அந்த வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைதளங்களில் மாளவிகா மோகனனுக்கு அதிக அளவிலான பாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்