பிணமாக தொங்கிய சீரியல் நடிகை! தற்கொலையா? – போலீஸார் விசாரணை!

Webdunia
திங்கள், 16 மே 2022 (08:28 IST)
மேற்கு வங்கத்தில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகை தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே. இவர் கொல்கத்தா நகரில் கர்பா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாக்னிக் சக்ரவர்த்தி என்ற நபரும் திருமணமாகமலே ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பல்லவி டே கண்டறியப்பட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் பல்லவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருடன் வசித்த சாக்னிக் சக்ரவர்த்தியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீரியல் நடிகை உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்