காலையில் திருமணம், மாலையில் தற்கொலை: மணப்பெண்ணின் பரிதாபம்!
ஞாயிறு, 15 மே 2022 (11:26 IST)
காலையில் திருமணமான இளம்பெண் ஒருவர் மாலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அவர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் புகைப்படங்கள் வீடியோக்கள் தெரிவிக்கின்றன
ஆனால் திருமணத்திற்கு முன்னர் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் இந்த திருமணம் வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்
இந்த நிலையில் திருமணம் முடிந்த மாலையில் கழிவறைக்கு சென்ற மணமகள் அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது