ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் அந்த படத்தின் வாய்ப்பு தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து மணிகண்டன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “குட்னைட் படம் முதலில் அசோக் செல்வன் சாருக்குதான் சென்றுள்ளது. அப்போது அவரிடம் தேதிகள் இல்லாததால் என்னை அழைத்து நல்ல கதை… பண்ணு என்றார். அப்படிதான் எனக்கு குட்னைட் படம் வந்தது எனக் கூறியுள்ளார்.