ஆனால், இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகிவிட்ட நிலையில், புதிய தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இன்று சிம்புவின் பிறந்தநாளில் தயாரிப்பாளர் பெயரோடு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை சிம்புவே தனது ஆத்மன் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்த படம் உருவாக இருப்பதை அடுத்து, இது குறித்த போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த போஸ்டரில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர், மனோஜ் பரமஹம்சா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயது சிம்பு கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி கொண்டிருக்கும் வகையில் இந்த படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.