ஆர்யாவின் அடுத்த பட இயக்குனர்-டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:11 IST)
ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில்  வெளியான திரைப்படம் ‘டெடி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ளனர் இந்த புதிய படத்திற்கு கேப்டன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் நாயகியாக சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் காவியா ஷெட்டி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்