மீண்டும் வில்லனாகும் அருண் விஜய்… அக்கட தேசத்தில் இருந்து வந்த வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (15:22 IST)
அருண் விஜய் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிலையான இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகள் போராடியவர் அருண் விஜய். சமீபகாலமாக அவர் நடித்த தடையறத் தாக்க மற்றும் தடம் ஆகிய படங்கள் வெற்றி பெற்று முன்னணி நடிகராகியுள்ளார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுத்தந்த படம் என்றால் அஜித்தின் என்னை அறிந்தால் படம்தான். அந்த படத்தில் அருண் விஜய்யின் விக்டர் என்ற வில்லனாக மிரட்டி இருந்தார்.

அதையடுத்து சாஹோ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க போவது அருண் விஜய்தானாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொலல்ப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்