சீனாவில் கொரோனா ருத்ரதாண்டவம்! – முடங்கியது ஷாங்காய் நகரம்!

செவ்வாய், 29 மார்ச் 2022 (11:16 IST)
சீனாவின் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஷாங்காய் நகரம் முடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். அவ்வபோது கொரோனா குறைந்தாலும் மீண்டும் புதிய அலைகள் தோன்றுவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாதம் மட்டும் சீனாவில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதனால் சீனாவின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் மிகப்பெரும் வர்த்தக நகரமான ஷாங்காயில் கொரோனா காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்