என்ன ஒரு வார்த்த கூட கேக்கல… RCB மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்திய சஹால்!

செவ்வாய், 29 மார்ச் 2022 (10:02 IST)
RCB அணியில் இருந்து இந்த ஆண்டு ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட வீரர்களில் சஹாலும் ஒருவர்.

ஆர்சிபி அணியின் வெற்றித் தூண்களில் ஒருவராக இருந்தவர் யஷ்வேந்திர சஹால். பல இக்கட்டான போட்டிகளில் தனது சுழலால் அந்த அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரை கழட்டிவிட்டது ஆர் சிபி அணி. இதையடுத்து இப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் RCB அணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர் ‘அணி நிர்வாகம் என்னிடம் அணியில் இருக்க விருப்பமா என்றோ அல்லது நாங்கள் உன்னை தக்கவைக்க விரும்பினோம் என்றோ கூறவில்லை. என்னைக் கேட்டிருந்தால் அணியில் இருக்க விரும்புகிறேன் எனக் கூறியிருப்பேன். ஏனென்றால் பணத்தை விட எனக்கு அணியே முக்கியம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்