பீஸ்ட் பிஸ்னஸை பூஸ்ட் செய்த அரபிக்குத்து பாடல்… இதுவரை இல்லாத தொகைக்கு விற்பனை!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
விஜய் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

வெளியாகி ஐந்து நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பாட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் அபரிமிதமான வரவேற்பால் இப்போது பீஸ்ட் படத்தின் ஓவர்சீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை விஜய் படத்துக்கு இல்லாத அளவுக்கு 38 கோடி ரூபாய்க்கு இறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்