நவீன சதுரங்கவேட்டைதான் அஜித் 61 படத்தின் கதையா? ஹெச் வினோத் பகிர்ந்த தகவல்!

சனி, 19 பிப்ரவரி 2022 (10:47 IST)
அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தையும் ஹெச் வினோத்தே இயக்க உள்ளார்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

இந்த படம் வலிமை போல ஆக்‌ஷன் படம் இல்லை என்பதால் குறுகிய காலத்தில் படத்தை முடித்து 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்க்கேற்றார் போல வேலை செய்து வருகிறதாம். இந்த படத்தின் கதை ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டது என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் அளித்த ஒரு நேர்காணலில் ‘சதுரங்க வேட்டை படத்தைப் போல ஒரு கதையைதான் அஜித்திடம் முதலில் சொன்னேன். அதில் சில மாற்றங்களை செய்துதான் இப்போது அஜித் 61 படத்தின் கதையாக உருவாக்கியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்