எஸ் பி பி யோடு நான் போட்டிருந்த திட்டம் – ரஹ்மான் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:14 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துடன் ஒரு அன்பிளக்ட் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்ததாக ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மூத்த திரையிசைப் பாடகரான எஸ் பி பாலசுப்ரமண்யம் செப்டம்பர் 25 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார். கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு விட்டாலும், அவரின் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இதயமுடக்கம் ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு திரைப் பாடல் ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பலரும் சமூகவலைதளங்களில் எஸ்பிபி உடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆங்கில இந்து நாளிதழ்க்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள ரஹ்மான் ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் டூயட் படத்தில் இடம்பெற்றுள்ள என் காதலே பாடலை பாடும் வீடியோவைப் பாடினேன். அதில் படத்துக்காக எப்படி பாடி இருந்தாரோ அப்படியே பாடி இருந்தார். அதைப் பார்த்து வியந்த நான் அவரை தொலைபேசியில் அழைத்து நீங்கள் சமீபத்தில் நான் இசையமைக்காமல் பிறரின் இசையில் பாடல்களை எல்லாம் தொகுத்து ஒரு அன்பிளக்ட்டு நிகழ்ச்சியை நடத்தலாமா எனக் கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்