அமேசான் நிறுவனத்தில் மட்டும் 20,000 பேருக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:15 IST)
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் பணியாளர்கள் 20,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மட்டும் தங்கள் சேவையை வழங்கி வந்தன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான,  அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் 19800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும்  1.37 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். 

அமேசான் நிறுவனம் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தகவல்களை வெளியிடுவதில் ரகசியம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்