’சூரரை போற்று’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
’சூரரை போற்று’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்!
சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு பிரபல நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை கொம்பன் முத்தையா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தெரிகிறது 
 
ஏற்கனவே கார்த்தியின் சகோதரர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் நாயகியாக நடித்த நிலையில் தற்போது கார்த்திக்கின் ஜோடியாக உள்ளார் அபர்ணா என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு கார்த்தி - முத்தையா படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் இயக்குனர் முத்தையாவின் வழக்கமான கிராமத்து அதிரடி ஆக்ஷன் கதை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்