பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். அவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசேபூர், தேவ் டி உள்ளிட்ட படங்கள் பெரியளவில் கவனம் பெற்ற படைப்புகளாக அமைந்தன.
சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அதனால் இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் லியோ மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் அவர் நடித்த ரைபிள் கிளப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு அங்கே பெரியளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அவர் பாலிவுட் சினிமாவைப் பற்றி காட்டமான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார். அதில் “திரைத்துறையினரிடம் இருந்து நான் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் இந்த துறை டாக்ஸிக் ஆகிவிட்டது. எல்லோரும் எதார்த்தமற்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். 500 கோடி, 800 கோடி திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். கலைக்கான மதிப்பு போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.