திரையரங்கில் சோபிக்காத தனுஷின் ‘NEEK’… ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

vinoth

வியாழன், 6 மார்ச் 2025 (10:08 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை அடுத்து தனுஷின் இயக்கத்தில்  மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் உருவானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா விமலகீதாவின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தற்கால 2 கே கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமான ‘NEEK’ பிப்ரவரி 21 ஆம் தேதி டிராகன் படத்துடன் ரிலீஸானது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடித்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பு இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் மார்ச் 21 ஆம் தேதி இந்த படம் ஸ்ட்ரீம் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்