வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள விரைவில் சோனி லிவ் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதையடுத்து நேற்று இந்த படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி இணையத்தில் வெளியிட்டார். பாலியல் வல்லுறவு செய்யப்படும் பெண் ஒருவர் தனக்கான நீதியைத் தேடும் போராட்டமாக இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து படம் நவம்பர் 17 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.