நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

vinoth

புதன், 26 மார்ச் 2025 (15:24 IST)
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய சூப்பர் ஹிட் படங்களும் அடக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் பெரிய ஹிட்கள் எதுவும் கொடுக்கவில்லை.

தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எல்லாம் பேன் இந்தியா ஹீரோக்களாக மாறி வருகின்றனர். இன்னும் மகேஷ் பாபு அந்த கட்டத்தை எட்டவில்லை. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வரும் படம் இந்தியாவின் பிரம்மாண்டமானப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மகேஷ் பாபு நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அதடு’ என்ற படம் தொலைக்காட்சியில் ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுவரை அந்த படம் 1500 முறைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. எந்தவொரு இந்திய படமும் படைக்காத சாதனை இது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்