இதுவும் அவுட்டா… நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் அனபெல் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:06 IST)
கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின்  பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக இன்று வெளியாகியது.

இந்நிலையில் டிவிட்டரில் இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இந்த மாதம் வெளியான துக்ளக் தர்பார் மற்றும் லாபம் படங்களும் தோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்