அமிதாப் ரோலில், ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிக்கும் அஜித்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (11:48 IST)
விஸ்வாசம் படத்தை அடுத்து  இயக்குநர் வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதாக படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூஷர் தெரிவித்துள்ளார். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் , வேதாளம் விவேகம், விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
 
படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்ட அஜித் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 
 
இந்த தகவல் இப்போது  உண்மையாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான பிங்க் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
 
அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது. மேலும் இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர்.
 
தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இதை ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூஷர் சூஜித் சிர்கார் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
மேலும், அஜித் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்