விஜய்க்கு போட்டியாக நடிக்கும் அஜித்?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (17:12 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஐரோப்பிய பைக் பயணத்தை முடித்த பின் சமீபத்தில் ஓமனில் பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து, சென்னை திரும்பினார்.எனவே விரைவில் அஜித்2 படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே,   இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பட ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த  நிலையில் இப்படத்தில்   திரிஷா மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா ஹீரோயின்களாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும்  விடாமுயற்சி ஷூட்டிங் அஸர்பைஜான் நாட்டுக்கு அருகே ஒரு பகுதியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லியோ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் முதியவர் மற்றும் இளம் வயது ஆகிய இரட்டை வேடங்களில் நடித்ததைப் போன்று விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு தோற்றத்திலும், நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்