மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்வின் காட்சிகள் அவர்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி, “இந்த தவறுக்கு நான் மட்டுமல்ல, என் படக்குழுவும் முழுப்பொறுப்பு ஏற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கலைஞராக, எந்த ஒரு மதத்தையோ, அரசியல் சிந்தனையோ எதிர்ப்பதற்காக நான் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க மாட்டேன். அது என் கடமை.
அதனால், ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில காட்சிகள் எதிர்ப்பை உருவாக்கியதால், அதை நீக்குவதற்கான முடிவை எடுத்து விட்டோம்.
நானும், எங்கள் படக்குழுவும் உங்கள் மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். கடந்த நாற்பது ஆண்டுகளாக, உங்கள் ஆதரவுடனே இந்த சினிமா பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் தான் எனக்கு மெய்ப்பொருள். அதற்காக நான் என்றும் கடமைப்பட்டவராகவே இருப்பேன்.