இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ஈபிஎஸ்

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:02 IST)
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். 
 
பல இஸ்லாமிய அமைப்புகள் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்னிடம் கோரிக்கை வைத்தன என்றும், அந்த அடிப்படையில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன் என்றும், முதலமைச்சர் பதில் அளிக்கும்போது இதற்கான பதில் அளித்திருந்தால் பிரச்னை இல்லை என்றும், ஆனால் இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கரை என கேட்டதோடு, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்று முதல்வர் கூறினார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
மேலும் இதற்காகத் தான் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது, அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது, சிறுபான்மையினர்கள் இன்று எங்களை சந்திப்பது திமுகவிற்கு கோபம் ஏற்படுத்துகிறது என்று பேரவையில் வெளிநடப்பு செய்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி  அளித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்