துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கம்!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (07:42 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. படத்தை விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லபடுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் கதையில் பெரிய மாற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்