'' #தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா.''..விஜய் மக்கள் இயக்க யூடியூப் சேனலில் ரிலீஸ்

வெள்ளி, 21 ஜூலை 2023 (20:35 IST)
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்த  காணொளியை விஜய் மக்கள் இயக்க யூடியூப் சேனலில் இன்று ஒளிபரப்பியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருடன் திரிஷா,மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய்தத், மிஸ்கின் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜூல் 17 ஆம் தேதி விஜய், மக்கள் இயக்கத்தின் சார்பில் கல்வி விழா நடத்தி மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார்.

இதையடுத்து, காமராஜர் பிறந்த நாளில் இலவச பயிலகம் தொடங்கினார்.

சமீபத்தில், கல்வி விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களைப் பாராட்டினார்.

அடுத்த நாளும், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்த  காணொளியை விஜய் மக்கள் இயக்க யூடியூப் சேனலில் இன்று ஒளிபரப்பியுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’#தளபதிவிஜய்கல்விவிருது வழங்கும் விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் & தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்த தளபதி  விஜய்  அவர்களின் பிரத்தியேக காணொளி!

நமது தளபதி விஜய் மக்கள் இயக்க யூடியூப்   சேனலில் கண்டுமகிழுங்கள்.!’’ என்று தெரிவித்துள்ளார்.

#EXCLUSIVE#தளபதிவிஜய்கல்விவிருது வழங்கும் விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் & தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்த தளபதி @actorvijay அவர்களின் பிரத்தியேக காணொளி!

நமது தளபதி விஜய் மக்கள் இயக்க @YouTube சேனலில் கண்டுமகிழுங்கள்.!… pic.twitter.com/SI5vo6f9cu

— Bussy Anand (@BussyAnand) July 21, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்