ஷூட்டிங் ஸ்பாட்டில் அவமரியாதை… செல்வராகவனிடம் கோபமான நடிகை!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:16 IST)
நடிகை சுதா செல்வராகவனிடம் 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் படப்பிடிப்பின் போது கோபமாக பேசியது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சுதா. இவர் செல்வராகவன் இயக்கிய 7 ஜி படத்தில் நாயகன் ரவி கிருஷ்ணாவுக்கு தாயாக நடித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பின்  போது செல்வராகவன் இவரிடம் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். இதனால் கோபமான சுதா ‘மரியாதையாகப் பேசுங்கள்’ எனக் கூறிவிட்டு ஸ்பாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்துக்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தும் காட்சிகள் சிறப்பாக வராததால் மீண்டும் சுதாவிடம் மன்னிப்புக் கேட்டு அவரையே நடிக்க வைத்தாராம். இதை சமீபத்தில் சுதா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்