அழகி, தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அருள்மணி. இவர் திரைப்பட கல்லூரி மாணவர். இவர் அதிமுகவில் இணைந்து பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு ஏற்பட அவர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், அதிமுகவினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக திரையுலகினரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.