ஷாருக் கானை விடாமல் துரத்தும் சன் பிக்சர்ஸ்… சம்மதிப்பாரா?

vinoth

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரமோஷன் வீடியோவோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷின் முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் பல முன்னணி நடிகர்களைக் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி, ரண்வீர் சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக் கானை நடிக்க வைக்க வேண்டும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் விடாமல் முயற்சி செய்து வருகிறதாம்.  ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லையாம். அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என சொலல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்