‘இந்தியில வேணாம்… தமிழ்ல பேசுங்க’… விருது நிகழ்ச்சியில் மனைவியிடம் சொன்ன ஏ ஆர் ரஹ்மான்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (09:27 IST)
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமா தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் மனைவியுடன் பங்கேற்றார் ரஹ்மான். அப்போது அவரின் மனைவி சாய்ரா பானு பேச ஆரம்பித்த போது ‘இந்தில பேசாதீங்க… தமிழ்ல பேசுங்க’ என சொல்ல அரங்கம் ஆரவாரித்தது.

பின்னர் பேசிய சாய்ரா பானு “எல்லோரும் மன்னிக்கனும். என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனக்கு இவரின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் குரல் மீது எனக்குக் காதல் உண்டு” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்