இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்கிழக்கு இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசைக் காற்றும், மேற்குத் திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி விருதுநகர், நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதக ஊறியுள்ளது.
கோடை காலத்தில் பல பகுதிகளிலும் வெயில் தாக்கல் அதிகம் இருந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவித்துள்ளது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.