போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணமோசடி.. பாடகி சித்ரா எச்சரிக்கை:

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (10:56 IST)
பாடகி சித்ரா பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, அதன் மூலம் பண மோசடி செய்துள்ள நிலையில், பாடகி சித்ரா இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தூதராக சித்ரா இருப்பதாகவும், அதில் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளை வாங்கினால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் உயரும் என சித்ரா கூறுவது போல   மர்ம நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சித்ராவின் அறிவுரையை ஏற்று முதலீடு செய்பவர்களுக்கு சித்ராவின் கையால் ஐபோன் பரிசாக தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மூலம் அறிந்த பாடகி சித்ரா, தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்