லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

vinoth
வியாழன், 10 அக்டோபர் 2024 (10:17 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான பின்னர் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் தேவரா போன்ற பெரிய படங்கள் ரிலீஸானாலும் இன்னமும் இந்த படத்துக்குக் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார் தமிழரசன் பச்சமுத்து. இதையடுத்து அவர் இயக்கும் புதிய தனுஷின் இட்லி கடை படத்தைத் தயாரிக்கும் Dawn Pictures நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதற்காக அவருக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் படத்தின் இமாலய வெற்றியால் இப்போது 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்