நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை.. மோசடி அதிகம் என எச்சரிக்கை..!

Mahendran

செவ்வாய், 8 அக்டோபர் 2024 (14:57 IST)
ஆன்லைனில் பட்டாசு சில்லறை விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனையாகி வருவதாகவும், அதில் பல நிறுவனங்கள் போலியான மோசடி நிறுவனங்களாக உள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி திருநாளின் போது பட்டாசு வெடிப்பதற்காக, பொதுமக்கள் குறைந்த விலையில் பட்டாசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, பணம் செலுத்தி, பார்சலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்தி, மோசடிகள் போலியான இணையதளம் நிறுவி, அதன் மூலம் பணத்தை மோசடி செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று பட்டாசு விற்பனையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பட்டாசுகள் ஆன்லைனில் சில்லறை விற்பனை செய்யக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், அதை மீறி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாக பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மோசடி கும்பல் மற்றும் ஏமாற்று பேர்வழிகள் ஆன்லைனில் அதிக அளவில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டாசு வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்