மனைவிக்காக வெற்றியை பரிசாக அளித்த விராத் கோலி

Webdunia
புதன், 2 மே 2018 (11:21 IST)
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாமின் பிறந்த நாள் பரிசாக அளிப்பதாக பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பெங்களூர் - மும்பை ஐபிஎல் போட்டி கிரிக்கெட் தொடரில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் விராத் கோலி 36 ரன்கள் எடுத்தார்.
 
இந்த வெற்றியை தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாள் பரிசாக அளிப்பதாக கோலி தெரிவித்தார். போட்டி முடிந்த பின் கோலி மனைவியுடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் விழா கொண்டாடினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்