விராத் கோலிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை முதல் இந்தியரானது எப்படி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (07:47 IST)
விராத் கோலிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு இந்தியரும் இவ்வளவு அதிகமான ஃபாலோயர்களை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
விராத் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் எண்ணிக்கை 50 மில்லியனை எட்டியுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. இதுகுறித்து விராத் கோலி தனது இன்ஸ்டாகிராம் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்
 
விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும், அதற்கு அடுத்து தீபிகா படுகோன் அவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ஏற்கனவே கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் தற்போது பல சாதனைகளைப் படைக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாக உள்ளது. பொதுவாகவே கோஹ்லி இந்தியாவில் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான அவரது ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும், சக கிரிக்கெட் விரர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்