தற்போது 168 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்களை இழந்து வலுவான நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி யார்றா இந்த பையன்? என வியக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் கோன்ஸ்டாஸின் இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் “கோன்ஸ்டாஸின் இன்னிங்ஸ் பார்க்கும் போது 21 ஆண்டுகளுக்கு முன்னர் சேவாக் எங்களுக்கு எதிராக ஆடிய அதிரடி இன்னிங்ஸ் ஞாபகம் வருகிறது. அந்த இன்னிங்ஸில் 233 பந்துகளில் 195 ரன்கள் சேர்த்து தனி ஆளாக எங்களை அடித்து நொறுக்கினார். கோன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி வந்ததால் கவாஜா மீதான அழுத்தம் குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.