இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் முன்னாள் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நடந்த உரையாடலில் “நான் கடந்த சில இன்னிங்ஸ்களாக சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் ரன் சேர்க்க தேவையான ஒழுக்கமுறையப் பின்பற்றவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட் நமக்குக் கொடுக்கும் சவால். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதில் நான் அதிக பந்துகள் எதிர்கொண்டு களத்துக்கு மரியாதை செய்யப் போகிறேன். அதை நான் கர்வத்தோடு செய்யப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.