கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
முதல் போட்டி இன்று காலை எட்டு முப்பது மணிக்கு தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது
இதனை அடுத்து இன்று மதியம் 12.30 மணிக்கு இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
இதனை அடுத்து 4.30 பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மூன்று போட்டிகள் இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய முதல் போட்டியான தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது