டி20 உலகக்கோப்பை: ஒரே ஓவரில் போட்டியை நிறுத்திய மழை!

புதன், 26 அக்டோபர் 2022 (10:04 IST)
டி20 உலகக்கோப்பை: ஒரே ஓவரில் போட்டியை நிறுத்திய மழை!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
 
அயர்லாந்து அணி  1.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இருப்பினும் இன்னும் சில நிமிடங்களில் மழை நின்றவுடன் போட்டி மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் ஏற்கனவே இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்றும் வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்தை பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்