ஐபிஎல் 2018 தொடரின் 43 வது லீக் ஆட்டமான இன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்பூரில் நடைபெற இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியோ 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே-ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும். ஆனால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும். ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி வீரர்கள் வழக்கமாக இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.