நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவுக்கு வெறும் 112 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்து, அபார பந்துவீச்சின் மூலம் திரில் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி உற்சாகமாகி, அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தாது. இதனையடுத்து 112 என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா விளையாடிய நிலையில், சாகல் உள்பட பஞ்சாப் பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சினால் வெறும் 95 ரன்கள் இழந்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து பஞ்சாப் அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கடுப்பில் இருந்த அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, பஞ்சாப் பவுலிங் போடும்போது அடுத்தடுத்து விக்கெட் விழுந்தபோது துள்ளி குதித்தார். குறிப்பாக கடைசி விக்கெட் விழுந்தபோது, அவர் தன் அருகிலிருந்த அணியின் நிர்வாகிகளை கட்டிப்பிடித்து, உடனடியாக மைதானத்தில் சென்று அணி பயிற்சியாளர் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தார்.