அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

Prasanth Karthick

புதன், 16 ஏப்ரல் 2025 (08:23 IST)

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்

 

நேற்று போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பஞ்சாப் பவர் ப்ளே வரையிலும் 4 விக்கெட்டை இழந்திருந்தாலும் 74 ரன்கள் வரை குவித்திருந்தது. ஆனால் பவர்ப்ளே முடிந்த வேகத்தில் கொல்கத்தா அணி பஞ்சாபின் விக்கெட்டுகளை சூறையாடத் தொடங்கிய நிலையில் 15.3 ஓவர்களிலேயே 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப்.

 

அதன்பின்னர் கொல்கத்தா அணி இறங்கியபோது இது ஈஸியான சேஸிங் ஸ்கோர்தான், KKR ஈஸியாக ஜெயித்து விடுவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பஞ்சாப் செம போட்டிக் காட்டியது. முதலில் பவர்ப்ளேக்குள்ள் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தாலும் 60 வரை அடித்திருந்தார்கள். ஆனால் 9வது ஓவர் தொடங்கி ஓவருக்கு ஒரு விக்கெட். 11 வது ஓவரில் 2 விக்கெட் என அடுத்தடுத்து கொல்கத்தாவை சூறையாடியது பஞ்சாப். சஹல் மட்டுமே அபார பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை தூக்கினார்.

 

இதனால் ஆட்டத்தின் போக்கே மாறிய நிலையில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை 15.1 ஓவரில் 95 ரன்களில் ஆல் அவுட் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் குறைவான ரன் அடித்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் இதேபோல எதிரணி நிர்ணயித்த 262 என்ற இமாலய ரன் இலக்கை 18.4 ஓவர்களிலேயே வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றின் மிக அதிகமான ரன் சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் படைத்தது இதே பஞ்சாப் கிங்ஸ் அணிதான். அப்போது பஞ்சாப்க்கு எதிராக விளையாடிய அணி எது தெரியுமா? நேற்று விளையாடிய இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்