ஐபிஎல் 2017 தொடரில் ரத்தான முதல் போட்டி. கோஹ்லிக்கு அடிமேல் அடி

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (06:34 IST)
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படு தோல்வி அடைந்த பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.



 


இந்த ஐபிஎல் தொடரில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்ட முதல் போட்டியக இந்த போட்டி அமைந்துவிட்டது. இந்த  போட்டி ரத்து செய்யப்பட்டது பெங்களூர் அணி வீரர்களுக்கு மட்டும் அல்லாது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மழை ஓரளவுக்கு நின்றதும் 20 ஓவர்கள் போட்டியை 5 ஓவர் போட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த கட்டுரையில்